உயிர்ப்பாதுகாப்பு முறைகள் மற்றும் நோய் தாக்குதலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய மேலாண்மை முறைகள்

  • உயிர்ப்பாதுகாப்பு முறைகள் என்பது கோழிகளை நோய் ஏற்படுத்தும் கிருமிகளிடம் தொடர்பு ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கிடையே நோய் ஏற்படுத்தும் கிருமிகள் பரவுவதையும் தடுத்தலாகும்.
  • தனிமைப்படுத்துதல், நடமாட்டத்தைக் குறைத்தல், சுகாதாரமான முறைகளைப் பின்பற்றுதல், தடுப்பூசி அளித்தல், கோழிகளில் ஊநீர் பரிசோதனை மூலம் நோய் தாக்குதலைக் கண்டறிதல், காற்றின் தரத்தை பரிசோதித்தல் போன்ற முறைகளின் மூலம் நோய்க்கிருமிகள் பண்ணையினைச் சுற்றியும், பண்ணையில் நுழைவதையும் தடுப்பதற்கான வழி முறைகளே உயிர்ப்பாதுகாப்பு முறைகளாகும்.
  • நோய்களின் தாக்கத்தைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் உயிர்ப்பாதுகாப்பு முறைகள் ஒரு செலவு குறைந்த, சிறந்த முறைகளாகும். உயிர்ப்பாதுகாப்பு முறைகள் இல்லாமல் எந்த ஒரு நோய்க் கட்டுப்படுத்தும் முறைகளும் நன்றாக வேலை செய்யாது.
  • நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் உடல் நலமும், சுகாதார முறைகளையும் உள்ளடக்கிய உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால் உங்கள் கோழிப்பண்ணைகளில் நோயின்றிப் பராமரிக்கலாம்.
  • உயிர்ப்பாதுகாப்பு முறைகள் பண்ணை செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
  • கோழிப்பண்ணை செயல்பாடுகள் நன்றாக செயல்பட ஆரம்பிக்க, ஆரம்பிக்க, அதிக எண்ணிக்கையிலான கோழிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளர்க்கப்படும் போது, கோழிப்பண்ணைகள் தங்களுக்கும், அருகிலுள்ளவர்களுக்கும் நோய் ஏற்படுத்துவதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. எனவே கோழிப் பண்ணையாளர்கள் நோய் ஏற்படுத்தும் கிருமிகளை பண்ணையிலிருந்து நீக்குவதற்கு நேரம் ஒதுக்கி செயல்பட வேண்டும்.
  • எனவே புதியதாகக் கோழிகளைப் பண்ணையில் விடும் போது அவசரப்படாமல், தகுந்த சுகாதார நடவடிக்கைகளைப் பண்ணையில் மேற்கொண்ட பின்பே அவற்றை பண்ணையில் விட வேண்டும்.
  • நவீன முறை கோழிகள் வளர்ப்பில் நோய்களுக்கெதிரான பாதுகாப்பை கோழிகளுக்கு அளிப்பது உயிர்ப்பாதுகாப்பு முறைகளாகும். அதாவது பண்ணையின் சுற்றுப்புறத்திலிருந்து நோய் ஏற்படுத்தும் கிருமிகளை முற்றியிலும் நீக்கி, வெற்றிகரமான, இலாபகரமான பண்ணையினை நடத்துவதற்கு உயிர்ப்பாதுகாப்பு முறைகள் உதவுகின்றன.
  • உயிர்ப்பாதுகாப்பு முறைகள், மருந்துகள் அளித்தல், தடுப்பூசி அளித்தல், நல்ல பண்ணை மேலாண்மை முறைகள் போன்றவை நோய்க்கட்டுப்பாட்டு முறை முக்கோணத்தில் மூன்று பக்கங்களாகும்.
  • கோழிகளுக்கு நோய் மற்றும் நோய்க்கிருமிகளின் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையினை அளித்து, அந்த சூழ்நிலையில் மருந்தளிப்பது மற்றும் தடுப்பூசி முறைகளை முறையாக வேலை செய்ய வைப்பது சிறந்த பயன்களை அளிக்கிறது.
  • நோய்க்கட்டுப்பாட்டு முக்கோணத்தில் உயிர்ப்பாதுகாப்பு முறைகள் ஒரு முக்கிய அங்கமாகும்.

உயிர்ப்பாதுகாப்பு முறைகளை செயல்படுத்தத் திட்டமிடல்

  • கோழிப்பண்ணையினை மற்ற கோழிப்பண்ணைகளிலிருந்து குறைந்தது மூன்று கிலோமீட்டர் தொலைவிலி இருக்குமாறு அமைக்கவேண்டும். இனப்பெருக்கக் கோழிப்பண்ணை, வணிக ரீதியாக வளர்க்கப்படும் முட்டை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகளிலிருந்து 1.6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இனப்பெருக்கக் கோழிப்பண்ணைகளை, வணிகரீதியாக வளர்க்கப்படும் முட்டை மற்றும் கறிக்கோழிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் முக்கியமான சாலைகளுக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலைகள் மற்றும் இதர பண்ணையின் பகுதிகளிலிருந்து இனப்பெருக்கக் கோழிப்பண்ணை தொலைவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உயிர்ப்பாதுகாப்பு முறைகள் வடிவமைப்பு

  • கோழிப்பண்ணையினைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, பார்வையாளர்கள் பண்ணைக்குள் நுழைவதைத் தடுத்தல்
  • பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆதாரமான கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றில் தண்ணீர் எடுத்து அதில் தாது உப்புகள், பாக்டீரியாக்கள், இரசாயன மாசுக்கள், நோய்க்கிருமிகள் இருப்பதைப் பரிசோதித்தல்
  • தீவனப்பைகளை சேமிப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்தல்
  • பண்ணையிலுள்ள அனைத்து சாலைகளும் சுத்தப்படுத்துவதற்கு ஏற்றவாறு அமைத்தல். இதனால் நுண்ணுயிரிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • இறந்த கோழிகளை விஞ்ஞான ரீதியாகவும், பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்துதல்
  • பாதுகாப்பான கொட்டகை அமைப்பு, கோழிக்கொட்டகைக்குள் இதர பறவைகள் மற்றும் எலிகள் நுழையாதவாறு வேலி அமைத்தல்
  • தீவனம், ஆழ்கூளம், பண்ணை உபகரணங்கள் சேமித்து வைக்க, கோழிக்கொட்டகைகளிலிருந்து தொலைவிலுள்ள ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதால் மேற்கூறிய பொருட்கள் அசுத்தமடைவைதைத் தடுத்தல்
  • பண்ணைக் கட்டிடங்களைச் சுற்றி மூன்று மீட்டர் சுற்றளவிற்கு எந்தத் தாவரங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதால் வனவிலஙகுகள், இதர பறவைகள் மற்றும் எலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்

உயிர்ப்பாதுகாப்பு முறைகளை செயல்படுத்துதல்

  • பண்ணையில் உள்ள பல்வேறு பகுதிகளான தீவன ஆலை, குஞ்சுபொரிப்பகம், இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை, அவசர கால மேலாண்மை போன்றவற்றில் தினசரி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளுக்காக ஒரு புத்தக வடிவிலான செயல் முறைகளை வடிவமைத்தல்
  • அசுத்தமடைந்த பொருட்களை முறையாக அப்புறப்படுத்துதல், பண்ணை உபகரணங்களை கிருமி நீக்கம் செய்தல், பண்ணைக்கொட்டகைகளை கிருமி நீக்கம் செய்தல் போன்றவற்றை கோழிகளைப் பண்ணையிலிருந்து கழித்த பிறகு முறையாக பின்பற்ற வேண்டும்.
  • பண்ணையினுள் நுழையும் பார்வையாளர்கள் விவரப் பதிவேடு, பண்ணையினைப் பார்வையிடுவதற்கான காரணம் பற்றிய விவரங்கள் கொண்ட பதிவேடுகளை பராமரித்தல்
  • இனப்பெருக்கக் கோழிப் பண்ணைகளில், பண்ணைக்குள் வாகனங்களோ அல்லது உபகரணங்களையோ அனுமதிக்கக்கூடாது.
  • வணிகரீதியாக வளர்க்கப்படும் கறிக்கோழிப் பண்ணைகளில் இரண்டு பேட்ச் கோழிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 2 வாரங்கள் இருக்கவேண்டும்
  • கோழிப்பண்ணையில் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தவும், எலிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உயிரியல்,வேதியியல் மற்றும் இயந்திரவியல் முறைகளைப் பின்பற்றுதல்
  • முறையான நோய் கண்டுபிடிப்பு முறைகள், முறையான தடுப்பூசி அட்டவணையினைப் பின்பற்றுதல்
  • சிறிய முட்டைக் கோழிப் பண்ணைகளில், ஒரே சமயத்தில் கோழிகளைப் பண்ணையில் விட்டு, ஒரே சமயத்தில் பண்ணையிலிருந்து கழித்து விடுதல். இவ்வாறு செய்யமுடியவில்லை என்றால், வளரும் நிலையில் இருக்கும் கோழிகளை நோய்த்தாக்குதல் இல்லாத பண்ணைகளிலிருந்து வாங்குதல்
  • முட்டைகளை ஒரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லும் அட்டைகளை திரும்ப உபயோகிக்கும் போது அவற்றை கிருமி நீக்கம் செய்து உபயோகிக்க வேண்டும்.
  • கோழிகளுக்கு நோய்களின் தாக்குதல் இருக்கிறதா என்பதைக் கண்டறிய கோழிகளை முறையான இடைவெளிகளில் நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்துதல், பிணப்பரிசோதனை, ஊநீரில் நோய் எதிர்ப்புப் புரதப் பரிசோதனை போன்றவற்றை முறையாக பின்பற்றுதல்
  • உடல் நலமற்ற, உற்பத்தித் திறன்ற்ற, நோயுற்ற கோழிகளைப் பண்ணையிலிருந்து கழித்தல்

                                                                                                                                                                      மேலே செல்க

நோயினைத் தடுப்பதற்கான மேலாண்மை முறைகள்


  கீழ்க்கண்ட மேலாண்மை முறைகள் கோழிகளுக்கிடையே நோய்கள் பரவுவதைக் குறைத்து, கோழிகளில் ஏற்படும் அயற்சியையும் குறைக்கின்றன
1) தனிமைப்படுத்துதல்

  • பல்வேறு வயதுடைய கோழிகளை ஒரே கொட்டகையில் வளர்க்கக்கூடாது. எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்போது எல்லாம் ஒரே சமயத்தில் கோழிகளைக் கொட்டகையில் புதிதாக விட்டு, அவற்றை ஒரே சமயத்தில் கொட்டகையிலிருந்து கழித்து விட வேண்டும்.
  • முறையான வீடமைப்பு, எலிகள் பண்ணைக்குள் நுழைவதற்கான தடுப்பு அமைப்புகள், முறையான காற்றோட்டம், தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளை முறையாக வடிவமைத்து அவற்றிலிருந்து தீவனம் மற்றும் தண்ணீர் சிந்தாமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் நோய் ஏற்படுவதைத் தடுக்கும் அவசியமான வழிமுறைகளாகும்.

2) ஆழ்கூள மேலாண்மை

  • ஈர ஆழ்கூளம் நோய்களைப் பரப்புவதற்கான முக்கியமான ஆதாரமாகும். முன்பே கூறியபடி ஆழ்கூளத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

3) தரமான கோழிக்குஞ்சுகள்

  • மைக்கோபிளாஸ்மோசிஸ், சால்மொனெல்லோசிஸ், ஐபிடி நோய்த் தாக்குதலற்ற இனப்பெருக்கக் கோழிகளிடமிருந்து பெறப்பட்ட முட்டைகளிலிருந்து பொரித்த குஞ்சுகளை விற்கும் குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளை வாங்க வேண்டும்.
  • கோழிக்குஞ்சுகளுக்கு மேரக்ஸ் நோய்க்கான தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். கோழிகளின் உடலில் நீர் பற்றாக்குறை இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெறப்பட்ட கோழிக்குஞ்சுகள் ஆரோக்கியமாகவும், அவற்றின் உடல் எடை அவற்றின் வயதுக்கேற்றவாறு சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4) சத்துகளை அளித்தல்

  • கோழிகளின் வயதுக்கேற்றவாறு சரிவிகித தீவனத்தைத் தயாரித்து அளிப்பதால் கோழிகள் நல்ல ஆரோக்கியத்துடன், நல்ல எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • இரத்தக்கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்துகளுடன், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளையும் கோழிகளின் தீவனத்தில் கலப்பது அவசியம்.

5) தண்ணீரின் தரம்

  • கோழிப்பண்ணையாளர்கள் கோழிகளுக்கு நல்ல தரமான தண்ணீரைக் அளிக்கத் தவறி விடுகின்றனர்.
  • ஒரு இடத்தில் கோழிப்பண்ணையினை அமைப்பதற்கு முன்பு, அந்த இடத்தில் தண்ணீரின் ரசாயனப் பண்புகள் மற்றும் அதிலுள்ள நுண்கிருமிகள் போன்றவற்றிற்கான பரிசோதனையினை மேற்கொள்ள வேண்டும்.
  • நுண்கிருமிகளால் தண்ணீர் அசுத்தமடைவது, தண்ணீரின் ஆதாரத்திலிருந்தே தொடங்கும். பிறகு தண்ணீரை ஒரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும், தண்ணீர்த் தொட்டிகளில் சேமித்து வைக்கும் போதும் தண்ணீர் மாசடைவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் சுகாதாரமான செயல்பாடுகளைப் பண்ணைகளில் பின்பற்றாவிட்டாலும் தண்ணீர் மூலம் நோய்கள் கோழிகளுக்குப் பரவும்.
  • மழை வெள்ளத்தின் போது தண்ணீரில் நுண்கிருமிகளின் அளவு அதிகமாகும்
  • தண்ணீர் மலத்தினால் அசுத்தமடைந்திருந்தால் அதில் கோலிஃபார்ம் எனும் பாக்டீரியாக்கள் இருக்கும்
  • தண்ணீரில் உள்ள தாது உப்புகளின் அந்தந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மையினைப் பொறுத்தது. ஆனால் காலநிலையினைப் பொறுத்தும், நிலத்தடி நீரின் அளவினைப் பொறுத்தும் தண்ணீரில் உள்ள தாது உப்புகளின் அளவு மாறுபடும்.
  • தாது உப்புகள் அதிகமாவதால் தண்ணீரின் கடினத்தன்மை அதிகரித்து, அதன் சுவை மாறுபடும்.

                                                                                                                                                                      மேலே செல்க

கோழிப்பண்ணையில் உபயோகிக்கப்படும் குடிநீருக்கான தர நிர்ணயங்கள்


கோழிகளுக்கு குடிப்பதற்கு அளிக்கப்படும் தண்ணீரின் சாதகமான குணநலன்கள் பின்வருமாறு:

      • மொத்த கடினத்தன்மை : 60-180
      • அமில காரத்தன்மை : 6.8-7.5
      • நைட்ரேட் : 10மில்லி கிராம்/லிட்டர்
      • நைட்ரைட் : 0.4 மில்லி கிராம்/லிட்டர்
      • மொத்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை : 0/மில்லி லிட்டர்
      • கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை : 0/மிலி
      • கால்சியம் குளோரைடு : 60 மிகி/லிட்டர்
      • சோடியம் : 50 மிகி/லிட்டர்
      • சல்ஃபேட் : 125 மிகி/லிட்டர்
  • அதிக அளவிலான தாது உப்புகள் தண்ணீரில் கரைந்திருந்தால் அவற்றை நீக்குவதற்கான எளிய, மலிவான செயல்முறைகள் இல்லை. எனவே அதிகப்படியான தாது உப்புகள் இருக்கும் தண்ணீரைக் கோழிகளுக்கு அளிப்பதற்கு பதிலாக வேறு தண்ணீர் ஆதாரத்திலிருந்து தண்ணீரைக் கோழிகளுக்கு அளிக்கலாம்.
  • குளோரினேசன் முறை தண்ணீரிலுள்ள பாக்டீரியாக்களை நீக்குவதற்கான மலிவான செயல்முறையாகும்.
  • 35% கிடைக்கக்கூடிய குளோரின் உள்ள பிளீச்சிங் தூளை 5-8 கிராம்கள் எடுத்துக் கொண்டு அதை 1000 லிட்டர் தண்ணீரில் கலப்பதால், அந்தத் தண்ணீரில் குளோரினின் அளவு 1-2 பிபிஎம் இருக்கும்.
  • தண்ணீரைக் சேமித்து வைக்கும் வசதி இல்லாத கோழிப்பண்ணைகளில் குளோரின் டை ஆக்சைடு, 5% சோடியம் ஹைப்போகுளோரைட் போன்ற திரவ குளோரின்களை 10 லிட்டர் தண்ணீரில் 1 மிலி என்ற அளவு கலந்து உபயோகிக்கலாம்.
  • 1.6% கிடைக்கும் அயோடின் உடைய ஐயோடோபோர்களை தண்ணீரை சுத்தம் செய்ய திரவ குளோரின்கள் உபயோகிக்கும் அளவிலேயே உபயோகிக்கலாம்.
  • குவார்ட்டனரி அமோனியம் பொருட்களை உடைய குவாட், குவாட்டோவெட், என்சிவெட், சோக்ரெனா போன்றவற்றையும் அவற்றின் தயாரிப்பாளர்களின் ஆலோசனைப்படி தண்ணீரை சுத்திகரிக்க உபயோகிக்கலாம்.
  • இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் கோழிகளுக்கு கொடுப்பதால், தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் தடுக்கப்படுவதுடன், அந்த நோய்களைத் தடுக்க உபயோகிக்கும் மருந்துகளுக்கான செலவும் குறைகிறது
  • The life of pipelines and storage tanks is also increased, and the overall growth of the birds and egg production efficiency will be improved.

                                                                                                                                                                         மேலே செல்க

இறந்த கோழிகளை அப்புறப்படுத்துதல்

  • புதிதாக கோழிகளைத் தாக்கும் நோய்களையும், தற்பொழுது கோழிகளைத் தாக்கும் நோய்களையும் தடுப்பதற்கு இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவது ஒரு முக்கியமான குறிக்கோளாகும்.
  • கோழிப்பண்ணைகளில் கோழிகள் இறப்பதை முற்றிலும் தடுக்கமுடியாது எனினும், நோய்களின் தாக்குதலைப் பொறுத்தும், பண்ணையில் பின்பற்றப்படும் சுகாதாரமான நடவடிக்கைகளைப் பொறுத்தும் கோழிகளில் ஏற்படும் இறப்பு விகிதம் மாறுபடும்.
  • இறந்த கோழிகளின் உடல்கள், பண்ணையிலுள்ள மற்ற கோழிகளுக்கும், அருகிலுள்ள மற்ற கோழிப்பண்ணையிலுள்ள கோழிகளுக்கும் நோய்க்கிருமிகளின் ஆதாரமாக இருக்கின்றன.
  • இறந்த கோழிகளின் உடல்களைக் கொட்டகையிலிருந்து எவ்வளவு சீக்கிரம் அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்புறப்படுத்தி விட வேண்டும்.
  • நோயுற்ற கோழிகள் தங்களது உடலிலிருந்து வெளியேறும் சளி, எச்சம், கண்ணீர் மற்றும் இதர பொருட்களின் வழியாக நோய்க்கிருமிகளை சுற்றுப்புறத்தில் வெளியேற்றுகின்றன. இதனால் மற்ற கோழிகளுக்கு நோய்க்கிருமிகளைப் பரப்புவதற்கான ஆதாரமாக நோயுற்ற கோழிகள் திகழ்கின்றன.
  • எனவே கோழிக் கொட்டகையில் ஆரோக்கியமாக இருக்கும் கோழிகளின் உடல் நலத்தைப் பாதிக்காமல் இருக்க, நோயுற்று இருக்கும் கோழிகளை உடனடியாகக் கொட்டகையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
  • இறந்த கோழிகளை அருகிலுள்ள குப்பைக் குழி, அல்லது திறந்த வெளிகளில் வீசும் பழக்கம் கீழ்க்கண்ட காரணங்களால் அபாயகரமானதும், அறிவியல் முறையும் அற்றதாகும்.
    • இறந்த கோழிகளின் உடலில் இருந்து வரும் வாசனை தெரு நாய்கள் மற்றும் பூனைகளை ஈர்ப்பதால், அவை இறந்த கோழிகளின் உடலை உண்டு விடுவதால், கோழிகளைத் தாக்கும் நோய்க்கிருமிகளுக்கான ஆதாரமாக இருக்கின்றன. மேலும் இந்த விலங்குகள் சுற்றுப்புறத்தில் தன்னிசையாகச் சுற்றித் திரிவதால், அருகிலுள்ள பண்ணைகளுக்கு நோய்க்கிருமிகளையும், நோய்க்கிருமிகளால் மாசடைந்த பொருட்களையும் கொண்டு சென்று நோயினைப் பரப்புவதில் முக்கி பங்கு வகிக்கின்றன.
    • கழுகுகளும்,இதர சுதந்திரமாக வாழும் பறவைகளும், நோயுற்ற கோழிகளின் உடல்களை உண்பதாலும், கொத்துவதாலும், அவையும் நோய்க்கிருமிகளை ஒரு பண்ணையிலிருந்து மற்றோரு பண்ணைக்கு எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. மேலும் சில சமயங்களில் நோய்க்கிருமிகளை ஒரு நாட்டிலிருந்து மற்றோரு நாட்டிற்குப் பரப்புவதிலும் இப்பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
    • இறந்த கோழிகளின் உடல்கள் பூச்சிகள் மற்றும் ஈக்களைக் கவரும். எனவே இவற்றை மொய்க்கும் ஈக்களும், நோயினைப் பரப்புவதில் பங்கு வகிக்கின்றன.
    • நோயினை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மழை பெய்யும் போது இறந்த கோழிகளின் உடலிலிருந்து மழை நீர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு தண்ணீர் ஆதாரங்களையும் அசுத்தமடையச் செய்கின்றன.
    • The surrounding area of the farm is contaminated with feathers and bones, causing soil pollution;
    • நோயினை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் மழை பெய்யும் போது இறந்த கோழிகளின் உடலிலிருந்து மழை நீர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு தண்ணீர் ஆதாரங்களையும் அசுத்தமடையச் செய்கின்றன.
  • தெரிந்த காரணங்களாலோ மற்றும் தெரியாத காரணங்களாலோ கோழிகள் இறந்தால் அவற்றின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துதல் வேண்டும்.
  • தெரிந்த காரணங்களாலோ மற்றும் தெரியாத காரணங்களாலோ கோழிகள் இறந்தால் அவற்றின் உடல்களை முறையாக அப்புறப்படுத்துதல் வேண்டும் .
  • பொதுவாக கோழிகளின் உடலை அப்புறப்படுத்தும் போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
    • கோழிக்கொட்டகையிலிருந்து இறந்த கோழிகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்புறப்படுத்த வேண்டும்.
    • தண்ணீர் செல்லும் ஓடைக்கு அருகில் இறந்த கோழிகளைப் புதைக்கக்கூடாது.
    • இறந்த கோழிகளின் உடலிலிருந்து வெளியேறும் திரவங்கள், அவற்றை பரிசோதனைக்கு எடுத்துச்செல்லும் போதும், புதைக்கும் அல்லது எரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போதும் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • இறந்த கோழிகளின் உடலிலிருந்து வெளியேறும் திரவங்கள், அவற்றை பரிசோதனைக்கு எடுத்துச்செல்லும் போதும், புதைக்கும் அல்லது எரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போதும் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலும் கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • எனவே கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளைப் அப்புறப்படுத்தும் முறைகளைப் பின்பற்றும் போது அவை சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

ஆழ்கூளத்தை அகற்றுதல்

  • கோழிக்கொட்டகையில் உள்ள கோழிகளை விற்ற பிறகு, ஆழ்கூளத்தையும், கூண்டு முறை கொட்டகைகளில் தேங்கியுள்ள கோழிகளின் எச்சத்தையும் அள்ளி, நேரடியாக வெயில் படுமாறு காய வைக்க வேண்டும்.
  • இதனை உரத்திற்காக உடனடியாக விற்று விட வேண்டும். கோழிகளை விற்ற பிறகு கோழிக்கொட்டகையில் ஆழ்கூளமோ, அல்லது கோழிகளின் எச்சசமோ நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கக்கூடாது.
  • இவற்றை மக்கி உரமாக்கும் முறை மிகவும் சிறந்தது. ஏனெனில் மக்கும் போது உண்டாகும் வெப்பம் எச்சம் மற்றும் ஆழ்கூளத்தில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று விடும்.

கிருமி நீக்கம் செய்தல்

  • நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பது கிருமி நீக்கம் செய்தலாகும்.
  • கிருமி நாசினி என்பது நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லக்கூடிய பொருளாகும். எனவே இவற்றை உயிரற்ற பொருட்களின் மீதும் தெளித்து அவற்றின் மீது இருக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்லவும் பயன்படுத்தலாம்.
  • முட்டை சேமிப்பு அறை, தீவனத்தட்டுகள், தண்ணீர்த் தட்டுகள், கட்டிடங்கள், செருப்புகள், போன்றவற்றைக் கிருமி நீக்கம் செய்ய பீனால், கிரசால், குளோரின் பொருட்கள், ஐயோடோபோர்கள் போன்ற கிருமி நாசினிகள் பயன்படுகின்றன. பார்மலின் திரவம் 5% அளவிலும், பார்மால்டிஹட் வாயு புகை மூட்டமும் நல்ல கிருமி நாசினிகளாக செயல்படுகின்றன.
  • கழுவிய பண்ணை உபகரணங்களை வெயிலில் காய வைக்கலாம். சிமெண்ட் தரைகளை கிருமி நீக்கம் செய்ய தீப்பிழம்புகளை உபயோகிக்கலாம்.
  • தாமிர சல்பேட் 0.5% பூஞ்சான்களுக்கு எதிராகச் செயல்படும் திறன் வாய்ந்தது.
  • குவார்டனரி அமோனியம் பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உபயோகிக்கும் போது நல்ல கிருமி நாசினிகளாகச் செயல்படுகின்றன. ஆனால் இவை கடினத்தன்மை வாய்ந்த தண்ணீரில் நன்றாகச் செயல்படுவதில்லை.
  • இப்பொருட்கள் வெறும் பரப்புகளை கிருமி நீக்கம் செய்யவும், முட்டை சேமிக்கும் அறைகளைக் கழுவவும், தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர்த் தட்டுகளைக் கழுவுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

கோழிப்பண்ணைகளில் எலிகளைக் கட்டுப்படுத்துதல்

  • முதன் முதலில் கோழிப்பண்ணையினை அமைக்கும் போதே அங்கு எலித்தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை எலிகள் பண்ணைக்குள் வந்து விட்டால் அவற்றை அழிப்பது கடினம்.
  • உபயோகப்படுத்தாத பண்ணை உபகரணங்கள், காலி கோணிப்பைகள் போன்ற எலிகளின் இனப்பெருக்கக் கூடாரங்களை உடனடியாக பண்ணையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • தினசரி சிந்தும் தீவனத்தை சுத்தம் செய்து விட வேண்டும். தீவனத்தை நல்ல காற்றோட்டமான இடத்தில், எலித்தொல்லை இல்லாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
  • எலிகளின் தொல்லை ஆரம்பிக்கும் போது முதலில் எலிக்கூண்டுகளையும், பிறகு எலிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எலிக்கொல்லி மருந்துகளை தயாரிப்பாளர்களின் ஆலோசனையின் பேரிலேயே உபயோகிக்க வேண்டும்.

கோழிப்பண்ணையில் பூச்சிகள் மற்றும் ஈக்களைக் கட்டுப்படுத்துதல்

  • கோழிகளில் பூச்சிகள் மற்றும் ஈக்களின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு, சுகாதாரமாக சுற்றுப்புறத்தைப் பராமரிக்க வேண்டும். ஏனெனில் ஈக்கள் நோய்களைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • ஈக்கள் கோழிகளின் மீது அமர்ந்து, கோழிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும். கோழிகளைத் தீவனம் மற்றும் தண்ணீரை எடுக்க விடாமல் தொந்தரவுகளை ஏற்படுத்தும். கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படும் போது, ஈக்கள்கோழிகளுக்கு அயற்சி ஏற்படுத்தி, முட்டை உற்பத்தியையும் குறைக்கும். கீழ்க்காணும் முறைகளில் ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
    • பண்ணையிலும், பண்ணையினைச் சுற்றியுள்ள பகுதிகளிலிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல்
    • முறையான கழிவு நீர் வடிகால்களை அமைத்து, தண்ணீர் ஒழுகும் குழாய்களை சரி செய்தல்
    • பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான அளவில் உபயோகித்தல்
    • தீவனம் மற்றும் தண்ணீரை முறையாகப் பரிசோதித்து, அவற்றால் கோழிகளுக்குக் கழிச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுதல்
    • கழிச்சல் ஏற்பட்ட கோழிகளுக்கு முறையாக சிகிச்சை அளித்தல்

பண்ணையைச் சுற்றிலும் புல் தரைகளை வளர்ப்பதால், செடிகளும், புதர்களும் வளர்வதைத் தடுத்து சுற்றுப்புறத்தை சுத்தமாகப் பராமரித்து ஈக்களைப் பண்ணையில் கட்டுப்படுத்தலாம்.
                                                                                                                                                                          மேலே செல்க